இந்தியா

வியாபாரிகளை அச்சுறுத்துவதா

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி : 'வியாபாரிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும்' என, புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் சிவசங்கர், பொதுச் செயலாளர் பாலு கூறியதாவது:சமீப நாட்களாக, கடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் சரிவர கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்த சோதனை என்ற பெயரில், புதுச்சேரி நகராட்சி சார்பாக அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்கிறது. சமூக இடைவெளியை சரிவர கடை பிடிக்கவில்லை என ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கின்றனர். அபராதம் கட்டாவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என வியாபாரிகளை மிரட்டுகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கிய நாளிலிருந்து, அரசுக்கு புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

கடைகள் திறந்து, மூடும் நேரம், வாடிக்கையாளருக்கு கை கழுவ சானிடைசர் வைப்பது, ஊழியர்கள் முக கவசம் அணிவது என அரசின் கட்டுப்பாடுகளை ஏற்று நடக்கிறோம். அரசின் கட்டுப்பாடுகளில் உள்ள முரண்பாட்டையும் சுட்டி காட்டுகிறோம்.நேர கட்டுப்பாடு, வெளியூர் மக்கள் வராதது என பல சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், விதிகளை மீறுவதாக கூறி வியாபாரிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். இத்தகைய நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் உடனே கைவிட வேண்டும். விதிகளை நடைமுறைப் படுத்தும் முன்பாக வியாபாரிகளை அழைத்து பேச வேண்டும்;

பொருந்தாத விதிகளை கை விட வேண்டும். விதிகளை அமல்படுத்தவில்லை என்றால் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்குவது, அதையும் மீறி செயல்பட்டால் அபராதம் விதிப்பது என விதிகளை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்.வியாபாரிகளை அச்சுறுத்தும் நடவடிக்கை தொடர்ந்தால், கடைகளை மூடக்கூடிய கடுமையான முடிவுக்கு நாங்கள் தள்ளப்படுவோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X