போலீஸ் டைரி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : ஜூன் 25, 2020
Share

குட்கா விற்ற இருவர் கைது

திருத்தணி: திருத்தணி அடுத்த, மேல்திருத்தணி பகுதியில், சில கடைகளில், தடை செய்த ஹான்ஸ், பான்பராக், புகையிலை போன்ற குட்கா பொருட்கள் தாராளமாக விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருத்தணி போலீசார் மேற்கண்ட பகுதியில் நேற்று, சோதனை நடத்தினர். அப்போது, இரண்டு கடைகளில், குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து, போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடையின் உரிமையாளர்கள் மகேஷ், 45, ராஜன், 42, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மணல் கடத்தியவருக்கு, 'காப்பு'

கடம்பத்துார்: கடம்பத்துார் அடுத்த, மடத்துக்குப்பம் பகுதியில், கூவம் கொசஸ்தலை ஆற்றில், மணல் கடத்தல் நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கடம்பத்துார் போலீசார், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது ஆற்றிலிருந்து, ஸ்பிளண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில், இரண்டு சாக்குப் பையில் மணல் கடத்தி வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் பிடிபட்ட நபர், ராமன்கோவில் மாரியப்பன், 27, என்பது தெரிய வந்தது. இதையடுத்து, கடம்பத்துார் போலீசார், வாலிபரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X