கண்காணிப்பு கேமரா இ.சி.ஆரில் அமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கண்காணிப்பு கேமரா இ.சி.ஆரில் அமைப்பு

Added : ஜூன் 25, 2020
Share

மாமல்லபுரம் : புதுப்பட்டினம், கூவத்துார் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்புகளில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

கல்பாக்கம் அடுத்த, புதுப்பட்டினம், கூவத்துார், காத்தங்கடை ஆகிய பகுதிகளில், கிழக்கு கடற்கரை சாலையில், பிற சாலைகள் இணைந்து, சந்திப்பு பகுதியாக அமைந்துள்ளன. இப்பகுதிகளில், உள்ளூர் வாகனங்கள், போக்குவரத்து விதிகளை அலட்சியப்படுத்தி, தாறுமாறாக இயங்கி, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.எனவே, வாகன போக்குவரத்தை கண்காணிக்கவும், வாகனங்கள் போக்குவரத்து வழிகாட்டு முறையில் இயங்கவும், சந்திப்புகளில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவல் துறையினர், நன்கொடையாளர்கள் மூலம், இவற்றை அமைத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X