அவசியமின்றி மருத்துவமனைக்கு வர வேண்டாம்: மருத்துவர்| Dinamalar

தமிழ்நாடு

அவசியமின்றி மருத்துவமனைக்கு வர வேண்டாம்: மருத்துவர்

Added : ஜூன் 25, 2020
Share
பொன்னேரி : மருத்துவர், செவிலியர் என, கொரோனா பரவி வருவதால், அரசு மருத்துவமனைக்கு அவசியம் இன்றி பொதுமக்கள் வர வேண்டாம் என, தலைமை மருத்துவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பொன்னேரி அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் வரை, 178 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதில், 148 சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது, 30 பேர் சிகிச்சையில்

பொன்னேரி : மருத்துவர், செவிலியர் என, கொரோனா பரவி வருவதால், அரசு மருத்துவமனைக்கு அவசியம் இன்றி பொதுமக்கள் வர வேண்டாம் என, தலைமை மருத்துவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொன்னேரி அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் வரை, 178 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதில், 148 சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது, 30 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு மருத்துவர்கள், நான்கு செவிலியர்கள், ஒரு துாய்மை பணியாளர் என, ஏழு பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.மருத்துவமனையிலும், கூடுதல் படுக்கைகளுடன் கொரோனா பிரிவு விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் தேவையின்றி மருத்துவமனைக்கு வர வேண்டாம் என, தலைமை மருத்துவர் அனுரத்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து தலைமை மருத்துவர் அனுரத்னா தெரிவித்துள்ளதாவது:மருத்துவமனைக்கு நோயாளிகளுடன், உதவியாளர் எனக்கூறி அதிகம் பேர் வருகின்றனர். கொரோனா பிரிவு பகுதிக்குள் தேவையின்றி சுற்றித் திரிகின்றனர். அவர்களை கட்டுபடுத்தும்போது, வீண் வாக்குவாதங்கள் ஏற்படுகிறது.

பொதுமக்கள் நலன் கருதி மருத்துவமனை நிர்வாகம் செயல்படுகிறது. அவசியம் இன்றி யாரும் மருத்துவமனைக்குள் வர வேண்டாம். பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்; அதே சமயம் அலட்சியமும் வேண்டாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X