இந்தியா

மக்களே உஷார்! ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா ... மாநிலத்தின் 4 பகுதிகளிலும் பாதிப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 மக்களே உஷார்!  ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா ... மாநிலத்தின் 4 பகுதிகளிலும் பாதிப்பு

புதுச்சேரியில் சமீபகாலமாக கொரோனா வைரஸ் தொற்று படுவேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக, நேற்று முன்தினம் ஒரே நாளில் 59 பேருக்கு தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.

இதில், புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் 58 பேர்; மாகி பகுதியை சேர்ந்தவர் ஒருவர். இவர்களையும் சேர்த்து, மொத்தம் 276 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய மாநிலத்தின் நான்கு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு பரவி உள்ளது. புதுச்சேரியில் கோவிட் மருத்துவமனையில் 173 பேர், ஜிப்மரில் 89 பேர், காரைக்காலில் 11, மாகி, ஏனாமில் தலா ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று பரவியது எப்படி?புதுச்சேரி பகுதியில் புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 25 பேர், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்.முக கவசம் தயாரிக்கும் கம்பெனியுடன் தொடர்புடைய மேலும் 14 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.இவர்களையும் சேர்த்து, முக கவசம் தயாரிக்கும் கம்பெனியுடன் தொடர்புடைய 55 பேர், தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 18 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை.

கடந்த சில நாட்களாக அவர்கள் எந்தெந்த இடங்களுக்கு சென்றனர், யார் யாரை சந்தித்தனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.மாகி பகுதியில் தொற்று கண்டறியப்பட்டுள்ளவர், சமீபத்தில் சென்னை சென்று திரும்பியவர்.176 பேர் மீண்டனர்கோவிட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் நேற்று முன்தினம் குணமடைந்தனர். இதையடுத்து, கொரோனாவில் இருந்து மீண்டு, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். புதுச்சேரியின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 461 ஆக உயர்ந்துள்ளது.புதுச்சேரியில் இதுவரை இல்லாத உச்சக்கட்ட எண்ணிக்கையாக, 59 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி உள்ளது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X