இந்தியா

நகராட்சி பகுதியில் புதிய கட்டடங்களுக்கு சொத்து வரி விதிக்க 13 சிறப்பு குழுக்கள்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதிய கட்டடங்களுக்கு சொத்து வரி, காலிமனை வரி, சாலை அபபிவிருத்தி கட்டணம் விதிக்கும் பொருட்டு, 13 சிறப்பு குழுக்களை புதுச்சேரி நகராட்சி அமைத்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சியானது, வருவாய் அலுவலர்களை கொண்டு, சமீபத்தில் சொத்து வரி விதிப்பில் விடுபட்டுள்ள மற்றும் புதிதாக உருவாகி உள்ள கட்டடங்கள் தொடர்பாக சர்வே செய்தது. சர்வேயில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கட்டடங்களுக்கு சொத்து வரி, காலிமனை வரி, சாலை அபிவிருத்தி கட்டணம் விதிக்கும் பொருட்டு, 13 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு களத்தில் கட்டடத்தை அளவீடு செய்து, சொத்து வரி விதிக்கும் பணியில் ஈடுபடும்.இப்பணி கடந்த 23ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, பணியாளர்கள் முககவசம் அணிந்து வருவர். பொதுமக்கள், இக்குழுவினர் கட்டடத்தை அளவீடு செய்யவும், சொத்து வரி விதிப்புக்கு தேவைப்படும் ஆவணங்களான, கட்டடம் அமைந்துள்ள இடத்தின் உரிமை தொடர்பான பத்திர நகல், உட்பட, அனைத்து ஆவணங்களின் நகல்களை, பணியாளர்களை காக்க வைக்காமல் அளிக்க வேண்டும். அத்துடன், சுய வரி விதித்து படிவத்தில் தவறாமல் கையொப்பம் இட வேண்டும்.

சொத்துவரி என்பது ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்தில் ஏப்ரல் 15 தேதிக்குள் கேட்பு அறிக்கையை எதிர்பார்க்காமல் தாமாக முன் வந்து செலுத்த வேண்டியதாகும். ஆனால் பெரும்பாலானோர், குறிப்பாக வணிகர்கள் நிதியாண்டின் இறுதியில் செலுத்திக் கொள்ளலாம் என நகராட்சி அலுவலர்களை அலைக்கழிப்புக்கு ஆளாக்குகின்றனர். இது சட்டப்படி தவறானது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X