84 வீடுகளில் தடுப்பு ஏற்படுத்தும் பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

84 வீடுகளில் தடுப்பு ஏற்படுத்தும் பணி

Added : ஜூன் 25, 2020
Share

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில், கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டவர்கள், 84 வீடுகளில் தடுப்பு ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது.

காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், நகராட்சி பகுதியில் வீடு தோறும் கொரோனா வைரஸ் பரிசோதனையும் துவங்கப்பட்டது.

இருந்தாலும், தொற்று பரவல் குறைந்தபாடில்லை. வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் வீடுகளில், தற்போது, தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதில், எண்ணைக்கார தெரு, பி.எஸ்.கே., தெரு, நடுத்தெரு, வெளிங்கபட்டரை, மாண்டுகன்னீஸ்வரர் கோவில் தெரு, கோட்ராம்பாளையம், டெம்பிள் சிட்டி பகுதி உட்பட, 84 வீடுகளில் தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறியதாவது:கலெக்டர் உத்தரவுபடி, வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது வரை, நகராட்சி பகுதியில், 104 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், அவர்கள் வசிக்கும், 84 வீடுகளில் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.பாதிக்கப்பட்டவர்கள் வீட்டின் அருகில் உள்ள இரு வீடுகளும் அடங்கும். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X