இந்தியா

கொரோனா பாதிப்பு விபரங்களை முழுமையாக திரட்ட உத்தரவு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி : கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருவோர் குறித்த விபரங்களை, தனியார் மருத்துவக் கல்லுாரிகளும், மருத்துவமனைகளும் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த முழுமையான தகவல்களை திரடட கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, புதுச்சேரியில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், கிளினிக் ஆகியவற்றில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருவோர் குறித்த விபரங்களை சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிறுவனங்களுக்கு, துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) ரகுநாதன் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'கொரோனா அறிகுறியுடன் தங்கள் நிறுவனத்தில் சிகிச்சைக்கு வருவோர் குறித்த விபரங்களை, இ - மெயில் மூலமாக சுகாதார துறைக்கு தினமும் தவறாமல் அனுப்பி வைக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார் .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X