இந்தியா

மீன்பிடி தடைக்கால நிவாரணம் தொடர்பாக 8 எம்.எல்.ஏ.,க்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி : மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பாக, மீனவ கிராமங்களை உள்ளடக்கிய தொகுதிகளை சேர்ந்த எட்டு எம்.எல்.ஏ.,கள் இன்று கவர்னர் கிரண்பேடியை சந்தித்து பேச உள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில், 23 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தடைக்கால நிவாரணம் பெற்று வந்தனர். இது, கடந்தாண்டு இது 19,500 பேராக குறைக்கப்பட்டது.இந்தாண்டு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. 'முதியோர் பென்ஷன் பெறுவோருக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கக் கூடாது' என கூறி, கவர்னர் கோப்பினை திருப்பி அனுப்பினார்.அதையடுத்து, இதுவரை மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்காததை கண்டித்து, புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமத்தினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மீன்பிடி தடைக்கால நிவாரணம் தொடர்பாக மீன்வளத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று சட்டசபை வளாகத்தில் ஆலோசனை நடத்தினார். அமைச்சர் ஷாஜகான், முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரிமணிகண்டன், ஜெயமூர்த்தி, அரசு கொறடா அனந்தராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அதை தொடர்ந்து, மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பாக, மீனவ கிராமங்களை உள்ளடக்கிய தொகுதிகளை சேர்ந்த எட்டு எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் கிரண்பேடியை இன்று காலை 11.௦௦ மணிக்கு சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

அப்போது கவர்னரிடம், கொரோனா ஊரடங்கு உள்ள சூழ்நிலையில் அனைத்து மீனவர்களுக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளனர்.மீனவ கிராமங்களில் முதியோர் பென்ஷன் மற்றும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் பெறுவோர் எண்ணிக்கை, அவர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா என சர்வே நடத்த கவர்னர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்து கணக்கு மற்றும் கருவூல துறைக்கு அனுப்பவும் கவர்னர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X