திருத்தணி : மத்துார் ஊராட்சியில், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பஜாரில், கடைகள் அடைத்து, வெளியூர் மக்கள் வராத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருத்தணி ஒன்றியம், மத்துார் ஊராட்சியில், மத்துார், கொத்துார் மற்றும் மூலமத்துார் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர்.மேலும், மத்துார் பஜாரில், 60க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், பஜாருக்குள், தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் தேவையில்லாமல் சுற்றித் திரிந்து வந்தனர்.மேலும், சென்னையில் இருந்து, சிலர் மத்துாரில் உள்ள உறவினர் வீடுகளுக்கு வந்தனர். இதனால், நான்கு நாட்களில், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இதையடுத்து, வருவாய் துறை, சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து, கிருமி நாசினி தெளித்து, சுகாதாரப் பணிகள் மேற்கொண்டனர்.மேலும், வெளியூர் ஆட்கள் யாரும் வராத வண்ணம், கிராம எல்லைகளில் தடுப்புகள் ஏற்படுத்தி கண்காணிக்கப்படுகிறது. பஜாரில் கடைகள் மூடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE