பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலை, 'சூப்பர் மார்க்கெட்'

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சென்னை : விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்காக, தோட்டக்கலைத் துறையால் சிட்லபாக்கத்தில், 'சூப்பர் மார்க்கெட்' திறக்கப்படுகிறது.

மாநிலம் முழுதும் காய்கறிகள், பழங்கள், வாசனைப் பொருட்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இப்பொருட்களை, மதிப்புகூட்டி விற்பனை செய்யும் பணிகளில், விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இவ்வாறு, சிறு தீனிகள், பிஸ்கட், ஜாம், ஜெல்லி, ஊறுகாய், மசாலா பொருட்கள் உள்ளிட்டவை தயாரித்து, குறைந்த விலையில் விற்கப்படுகிறது.

பெரிய அளவில் விளம்பரங்கள் இல்லாததால், அவற்றின் விற்பனை மிகவும் குறைவாக உள்ளது. விவசாயிகளிடம், கமிஷன் ஏஜன்டுகள் பொருட்களை கொள்முதல் செய்வதால், விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதில்லை. இவை சந்தைகளில் கூடுதல் விலையில் விற்கப்படுவதால், நுகர்வோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, விவசாயிகள், நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில், தோட்டக்கலைத் துறையால் பல்வேறு இடங்களில், சூப்பர் மார்க்கெட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் சூப்பர் மார்க்கெட், சிட்லபாக்கத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை வட்டார அலுவலகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு, புதிதாக அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள், பழங்கள் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் விவசாயி குழுக்கள் தயாரிக்கும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.

வெளி மாவட்டங்களில் இருந்து எடுத்து வரப்படும் பொருட்களை, பதப்படுத்தும் வகையில், சிறிய அளவிலான குளிர்பதன கிடங்கும், இங்கு அமைக்கப்பட உள்ளது. ஊரடங்கு முழுமையாக விலக்கி கொண்ட பிறகு, இந்த சூப்பர் மார்க்கெட்டை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தோட்டக்கலைத் துறை இயக்குனர் சுப்பையன் உத்தரவுப்படி, இதற்கான பணிகளில், தோட்டக்கலைத் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X