பொது செய்தி

தமிழ்நாடு

20 பேர் முன்னிலையில் கரம்பிடித்த புதுமண தம்பதி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 20 பேர் முன்னிலையில் கரம்பிடித்த புதுமண தம்பதி

திருவொற்றியூர் : கடுமையான ஊரடங்கால், நிச்சயிக்கப்பட்ட திருமணம், 20 பேர் பங்கேற்புடன் எளிமையாக நடந்தது.

சென்னை, திருவொற்றியூர் பால கிருஷ்ணா நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் - பிரியங்கா திருமணம், நேற்று காலை, நிச்சயிக்கப்பட்டிருந்தது.ஐந்தாம் கட்டமாக, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், திருமணத்தை விமரிசையாக நடத்த முடியவில்லை. மாறாக, வீட்டருகே உள்ள, செல்வ விநாயகர் கோவிலில், நடத்துவதென முடிவானது.அதன்படி, முக கவசம் அணிந்தபடி, மணமக்கள் பங்கேற்றனர். பின், நெருங்கிய உறவினர்கள், 20 பேர் மட்டுமே பங்கேற்ற நிலையில், மிக எளிமையாக, திருமணம் நடத்தி முடிக்கப்பட்டது.திருமண விழாவில், தனி மனித இடைவெளி, முக கவசம், கிருமி நாசினி போன்ற தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X