பொது செய்தி

தமிழ்நாடு

விமரிசையாக நடந்த ஜகன்னாத் ரத யாத்திரை

Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 விமரிசையாக நடந்த ஜகன்னாத் ரத யாத்திரை

சென்னை : சென்னையில், 'இஸ்கான்' சார்பில், ஜகன்னாத் ரத யாத்திரை நடந்தது. ரதத்தில் வலம் வந்த ஜகன்னாத், பாலாதேவ், சுபத்ரா ஆகியோர் அருள் பாலித்தனர்.

ஒடிசா மாநிலம், புரியில் ஆண்டுதோறும் ஜகன்னாத் யாத்திரை விமரிசையாக நடக்கும். அதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். அதை முன்னிட்டு, சென்னையில், ஆண்டுதோறும் ஜனவரியில், ஜகன்னாத் யாத்திரை நடத்தப்பட்டு வந்தது. இந்தாண்டு முதல், புரியில் நடக்கும் நாளில் நடத்த, இஸ்கான் சார்பில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று முன்தினம், சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, இஸ்கான் கோவிலில் ஜகன்னாத் ரதயாத்திரை, உற்சாகமாக நடந்தது. ரதத்தில், ஜகன்னாத், பாலாதேவ், சுபத்ரா வலம் வந்து, அருள் பாலித்தனர். பின், ஆரத்தியுடன் விழா நிறைவு பெற்றது.ஊரடங்கு காரணமாக, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் உள்ளவர்கள் மட்டும் பங்கேற்றனர். ரதயாத்திரையை 'ஆன்-லைன்' மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூன்-202006:32:44 IST Report Abuse
ஆப்பு கொரோனாதான் போக மாட்டேங்குது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X