பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் அரசுக்கு கோரிக்கை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சென்னை : 'சாத்தான்குளம் சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது, கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம், காவல் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், போலீஸ் தாக்குதலில், தந்தை, மகன் மரணம் அடைந்தது, தமிழகம் முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தொடர்பாக, தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பில், அதன் நிறுவன தலைவர் சந்திரன் ஜெயபால், காவல் துறை தலைமை இயக்குனருக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:போலீசாரால், தந்தை, மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டதை, எங்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த சம்பவம், காவல் துறைக்கும், தமிழக அரசுக்கும் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது.

ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், பால்துரை, காவலர்களான முத்துராஜ், ஜேசுராஜ், ரகுகணேஷ், வேலுமுத்து, ஆகியோர் மீது, கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும்.அவர்களை, தற்காலிக பணிநீக்கம் செய்தது, கண்துடைப்பு வேலையாக கருதுகிறோம். நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். எவ்வளவு பெரிய இழப்பீடு தொகை வழங்கினாலும், இரண்டு உயிர்களுக்கு ஈடாகாது.பாதிக்கப்பட்ட ஜெயராஜ் குடும்பத்தை காக்கவும், இனி இதுபோன்ற சம்பவம், தமிழகத்தில் எங்கும் நடைபெறாத வகையில் தடுக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X