சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவக்கல்லூரி 'நர்ஸ்' உட்பட 34 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நர்ஸ் உட்பட 34 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 654 ஆக உயர்ந்துள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் 620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 12 பேர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 218 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும், விழுப்புரம் தேவநாதசாமி நகரை சேர்ந்த 37 வயது பெண் உட்பட மாவட்டத்தில் நேற்று 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் பாதிப்பு 654 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா முன்னெச்சரிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் 656 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நோயில் இருந்து குணமடைந்த 28 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சுகாதாரத்துறை சிறப்பு மையங்களில் 465 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X