சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதுமலையில் மான் சமையல் முதுகுழியில் நால்வர் கைது

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கூடலுார்; முதுமலையில், மான் இறைச்சியை சமைத்து உட்கொண்ட நான்கு பேரை, வனத்துறையினர் கைது செய்து, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை வனச்சரகம், முதுகுழி கிராமம் அருகே, சில நாட்களுக்கு முன், புள்ளி மான் இறந்து கிடந்தது. அதன் உடலிலிருந்து, இறைச்சியை சிலர் எடுத்து சென்றது தெரியவந்தது.வனச்சரகர் தயானந்தன் தலைமையில் விசாரணை நடந்தது. அதில், முதுகுழி பகுதியை சேர்ந்த ராஜன்,38, ராஜ்குமார்,30, சீனிவாசன்,31, நாராயணன்,40, ஆகியோர் இறைச்சியை எடுத்து சென்று, சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. அவர்கள் நான்கு பேரையும், வனத்துறையினர் கைது செய்து, விசாரித்தனர்.முதுமலை துணை இயக்குனர் செண்பகபிரியா உத்தரவுபடி, வனத்துறையினர் நான்கு பேருக்கும் தலா, 25 ஆயிரம் ரூபாய் வீதம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X