பொது செய்தி

தமிழ்நாடு

முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் தவிப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சென்னை : ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, முதியோர் உதவித்தொகை கிடைக்காததால், அமைப்பு சாரா தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில், பதிவு செய்த தொழிலாளர்களில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மாதம், 1,000 ரூபாய், முதியோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது.இவர்களுக்கு, 2019 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது. அதேபோல், ஊரடங்கு காரணமாக, அரசு அறிவித்த, 2,000 ரூபாயும் கிடைக்கவில்லை என, தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது குறித்து, தொழிலாளர் ஒருவர் கூறியதாவது:நான், 2013ல் இருந்து, தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில், உதவித்தொகை பெற்று வருகிறேன். கடந்த, ஆகஸ்ட் மாதம் முதல், உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது.இதுகுறித்து, தி.நகரில் உள்ள, அலுவலகத்தில் கேட்டபோது, அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என, தெரிவிக்கின்றனர்.தற்போது ஊரடங்கில், அரசின் நிவாரணத் தொகையும், உதவித்தொகையும் கிடைக்காமல் தவித்து வருகிறேன். நிலுவையில் உள்ள உதவித்தொகையாவது வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X