சென்னை : ''சென்னையில் தினமும், 6,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது,'' என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில் உள்ள கொரோனா தனிமை மையத்தில், வருவாய் துறை, பேரிடர் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் வழங்கிய பின், அமைச்சர் அளித்த பேட்டி:
கொரோனா பாதிப்பில், திரு.வி.க., நகர் மண்டலம், முதல் இடத்தில் இருந்து, ஆறாவது இடத்துக்கு வந்துள்ளது.சென்னையில், மிகப்பெரிய கொரோனா மருத்துவ கவனிப்பு மையமாக, புளியந்தோப்பு மையம் செயல்பட்டு வருகிறது.நோயாளிக்களுக்கான, 1,400 படுக்கைகளோடு, மற்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த மையம், ஓமந்துாரார், கீழ்பாக்கம், ஸ்டான்லி, ராஜிவ்காந்தி மருத்துவக் கல்லுாரிகளின் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. தினசரி, 6,500 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. தேவையான அளவு பரிசோதனையை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE