பொது செய்தி

தமிழ்நாடு

கின்னஸ் பூங்காவுக்கு மீண்டும் 'ஆக்ஸிஜன்'

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 கின்னஸ் பூங்காவுக்கு மீண்டும் 'ஆக்ஸிஜன்'

ஊட்டி; ஊட்டி கின்னஸ் சாதனை பூங்காவுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில், முன்னாள்; இன்னாள் கலெக்டர்கள், 250 மரக்கன்று நடவு செய்தனர்.

ஊட்டி அருகே குருத்துகுளி பகுதியில், கால்நடை துறைக்கு சொந்தமான, 80 ஏக்கர் நிலத்தில், கடந்த 2002ம் ஆண்டில், அப்போதைய கலெக்டரும், தற்போதைய, நீலகிரி கண்காணிப்பு அதிகாரியாக உள்ள சுப்ரியா சாஹூ முயற்சியால், 42 ஆயிரத்து 182 மரக்கன்று நடப்பட்டது. இதற்காக, 2002 ஜூன், 24ம் தேதி கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது.இந்நிலையில், சாதனை தினமான நேற்று, கின்னஸ் சாதனை பூங்காவுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக, அதே பகுதியில், சுப்ரியா சாஹூ மரக்கன்று நடவு செய்து பேசுகையில்,''கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற இந்த பூங்காவுக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பதற்காக மரக்கன்று நடவு செய்யப்படுகிறது. அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து, இப்பூங்காவில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, 250 மரக்கன்று நடவு செய்யப்பட்டது. தொடர்ந்து, 2002ம் ஆண்டு, மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்பட்ட, கின்னஸ் சான்று போன்ற நினைவு பரிசு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கப்பட்டது. ஆர்.டி.ஓ., சுரேஷ் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X