சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், நேற்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.

கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 893 பேர் கொரோனா தொற்றால் பாதித்ததாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. கொரோனா தொற்றுக்கு இதுவரை 5 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், நேற்று 17 பேருக்கு தொற்று உறுதியானது.

சென்னையில் இருந்து மங்கலம்பேட்டை திரும்பிய இருவர், கம்மாபுரத்தை சேர்ந்த ஒருவர், மங்கலம்பேட்டைக்கு குஜராத்தில் இருந்து திரும்பிய ஒருவர்; கேரளாவில் இருந்து திரும்பிய இருவர், காஞ்சிபுரத்தில் இருந்து மருங்கூர் திரும்பிய ஒருவர், கம்மாபுரம் மற்றும் மங்கலம் பேட்டை ஆய்வக உதவியாளர்கள் இருவர், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தனிமைபடுத்தப்பட்டவர்கள் என மருங்கூரைச் சேர்ந்த ஏழு பேர், கம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதித்தவர்களின் எண்ணிக்கை 910 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் வரை 506 பேர் குணமடைந்த நிலையில், நேற்று மேலும் 10 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட 389 பேர் சிதம்பரம், கடலுார், திருச்சி, சென்னை உட்பட பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 20 ஆயிரத்து715 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 910 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

17ஆயிரத்து 996 பேருக்கு தொற்று இல்லை. 1,809 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், வெளி பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என 213 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X