சித்து வீட்டுக் கதவில், நோட்டீஸ் பீஹார் போலீசார் நடவடிக்கை| Dinamalar

சித்து வீட்டுக் கதவில், 'நோட்டீஸ்' பீஹார் போலீசார் நடவடிக்கை

Added : ஜூன் 25, 2020
Share

அமிர்தசரஸ்; முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான நவ்ஜோத் சிங் சித்து, தேர்தல் வழக்கு தொடர்பாக எந்த பதிலும் அளிக்காததையடுத்து, அவரது வீட்டுக் கதவில் பீஹார் போலீசார், 'நோட்டீஸ்' ஒட்டினர்

பஞ்சாபில், முதல்வர் அம்ரீந்தர் சிங் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர், நவ்ஜோத் சிங் சித்து, கடந்த ஆண்டு நடத்த லோக்சபா தேர்தலின் போது, பீஹாரில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.கதிஹார் மாவட்டத்தில் பிரசாரம் செய்த போது, ஒரு சமூகத்தை தரக்குறைவாக விமர்சித்தார்.

இதையடுத்து, அவர் மீது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக, பீஹாரைச் சேர்ந்த, இரண்டு போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர்கள், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் உள்ள சித்து வீட்டுக்கு, கடந்த, 18ம் தேதி வந்தனர்.ஆனால், அவர்களை சித்து சந்திக்கவில்லை, கடந்த ஆறு நாட்களாக, தினமும், இரண்டு சப் - இன்ஸ்பெக்டர்களும், சித்து வீட்டுக்கு வந்து, ஐந்து மணி நேரம் காத்திருந்தும், அவர்களை சித்து சந்திக்கவில்லை.

இதையடுத்து, அவரது வீட்டுக் கதவில், போலீசார் நோட்டீஸ் ஒட்டினர்.இது பற்றி, அவர்கள் கூறுகையில், 'வழக்கு தொடர்பான ஜாமின் பத்திரத்தில் கையெழுத்து வாங்கவே, சித்துவைசந்திக்க வந்தோம். கடந்த ஆறு நாட்களாக, நாங்கள் தினமும் அவரது வீட்டு வாசலில், ஐந்து மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தோம்.'ஆனால், யாரும் எங்களை கண்டு கொள்ளவில்லை. அதனால், வீட்டுக் கதவில் நோட்டீஸ் ஒட்டினோம்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X