ஆந்திராவுக்கு கடத்த முயன்ற பாலி கீட்ஸ் புழுக்கள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 'பாலி கீட்ஸ்' புழுக்கள் பறிமுதல்

Added : ஜூன் 25, 2020
Share

எண்ணுார் : எண்ணுாரில் இருந்து ஆந்திராவிற்கு, 'பாலி கீட்ஸ்' புழுக்கள் கடத்த முயன்றவரை, மடக்கி பிடித்த போலீசார், 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான புழுக்களை பறிமுதல் செய்தனர்.

எண்ணுார், முகத்துவாரத்தில், அரிய வகை, 'பாலி கீட்ஸ்' எனும் பூரான் புழுக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதை, வனத்துறை அனுமதியின்றி பிடித்து, ஆந்திரா கள்ளச்சந்தையில், சிலர் விற்பனை செய்தவதாக புகார்கள் எழுந்தன.இதனிடையே, ஊரடங்கு காரணமாக, நேற்று முன்தினம் இரவு, எண்ணுார் - அத்திப்பட்டு புதுநகர் பாலம் இணைப்பு பாலத்தில், எண்ணுார் போலீசார் வாகன சோதனையில்ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியே சென்ற காரை மடக்கி விசாரித்தனர். ஓட்டுனர், முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, காரை சோதனையிட்டனர். காரில், முகத்துவாரத்தில் அனுமதியின்றி பிடிக்கப்பட்ட, பாலிகீட்ஸ் புழுக்கள், கவர்களில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள புழுக்களை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுனர் கர்ணன், 45, என்பவரை, கும்மிடிப்பூண்டி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X