தமிழ்நாடு

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சி.எம்.டி.ஏ.,வில் ஆய்வு கூட்டம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சென்னை : ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, சி.எம்.டி.ஏ.,வில் நேற்று நடந்த அடுக்குமாடி திட்ட ஆய்வு கூட்டத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், அதிக எண்ணிக்கையில் குவிந்ததால், பணியாளர்கள் அச்சமடைந்தனர்.

கொரோனா தடுப்புக்காக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, அலுவலக நிர்வாகம் தொடர்பாக, கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டன. இதன்படி, 33 சதவீத பணியாளர்களுடன், அலுவலகங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.துறை ரீதியான ஆய்வு கூட்டங்களுக்கு, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன்படி, 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடியகூட்டங்களை, 'ஆன்லைன்' முறையில் மட்டுமே நடத்த வேண்டும் என,உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மத்திய, மாநில அரசுகளில், பல்வேறு துறைகளில் கூட்டங்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடத்தப்படுகின்றன.இந்த கட்டுப்பாடு, சி.எம்.டி.ஏ.,வில் மீறப்பட்டதாக புகார் எழுந்து உள்ளது.அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு, முந்தைய ஆய்வு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில், 10க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் அதிகாரிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். ஆய்வுக்காக வந்த அதிகாரிகள், அவர்களின் உதவியாளர்கள் என, 50 பேருக்கு மேல் சி.எம்.டி.ஏ., அலுவலக கூட்ட அரங்கில் திரண்டனர்.

இது குறித்து, கூட்டத்தில் பங்கேற்ற ஒரு அதிகாரி கூறியதாவது:சமூக விலகல் குறித்த எவ்வித புரிதலும் இன்றி, இவ்வளவு பேரை வரவழைத்தது தவறு. மத்திய அரசின் ஊரடங்கு விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.பொது மக்களை கூட்டம் சேராதீர்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதிகாரிகளே, இப்படி கூட்டத்தை நடத்துவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா குறித்தஅச்சத்திலேயே, இந்த கூட்டம் நடந்ததால், எங்களால் முழுமையான கவனம் செலுத்த முடியவில்லை.இது போன்ற குளறுபடிகளை தவிர்க்க, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X