சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்னல் தாக்கி 2 மாணவர்கள் பலி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் கிரிக்கெட் விளையாடியதை வேடிக்கை பார்த்த மாணவர்கள் இருவர் மீது மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தனர்.

கடலுார் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பழைய ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த செல்வகுமார் மகன் பிரவீன்குமார், 16; பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ஸ்ரீமுஷ்ணம் கொம்பாடித் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் ராம்குமார், 17; பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.பிரவீன்குமார், ராம்குமார் ஆகியோர் நண்பர்கள் கிரிக்கெட் விளையாடிய நகரப்பாடியார் திடலுக்கு சென்று, வேடிக்கை பார்த்தனர். அப்போது, மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யும் நிலையில், திடீரென பிரவீன்குமார், ராம்குமார் மீது மின்னல் தாக்கியது. இதில் இருவரும் உடல் கருகி இறந்தனர்.ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் முகமது அசேன், வி.ஏ.ஓ., சரத்பாபு,சப் இன்ஸ்பெக்டர்கள் வைத்தியநாதன், சேகர் மற்றும் போலீசார் விசாரித்தனர்.இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X