திசை திருப்ப இந்திய அரசு முயற்சி: பாக்., அமைச்சர் பிதற்றல்

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
India, Pakistan, SM Qureshi, Pakistan Foreign Minister Shah Mahmood Qureshi, இந்தியா, பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: “எல்லைப் பிரச்னைகளில் இருந்து, அனைவரையும் திசை திருப்பும் முயற்சிகளில், இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது,” என, பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் பாக்., தூதரக அதிகாரிகள், உளவு பார்த்ததாக, இந்திய அரசு, சமீபத்தில் குற்றஞ்சாட்டியது. இதற்கு பழிவாங்கும் விதமாக, பாக்., தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை கடத்தி, பாக்., சித்ரவதை செய்தது. இந்தியாவின் எச்சரிக்கையை தொடர்ந்து, பாக்., தூதரக அதிகாரிகளை விடுவித்தது.

இதற்கிடையே, பாக்.,கில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க, இந்திய அரசு முடிவு செய்தது. அதேபோல், டில்லியில் உள்ள பாக்., தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையையும், பாதியாக குறைக்குமாறு, பாக்.,கிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


latest tamil news


இதுகுறித்து பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இருக்கும் எல்லைப் பிரச்னைகளில் இருந்து, அனைவரையும் திசைத் திருப்பவே, இந்திய அரசு, இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து, இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள், அரசிடம் கேள்வி எழுப்பி வருகின்றன. ஆனால், அதற்கு பதிலளிக்க முடியாமல் அரசு உள்ளது.

இந்தியாவில், பாக்., தூதரக அதிகாரிகள் உளவு பார்த்ததாக கூறுவது, ஆதாரமற்ற குற்றச்சாட்டு. எங்கள் மீது பொய் பழி சுமத்துவதை, இந்தியா நிறுத்திக்கொள்ளவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Santhosh Kumar - Chennai,இந்தியா
25-ஜூன்-202014:59:56 IST Report Abuse
Santhosh Kumar வீணாக பழி சுமத்துவதாகத் தெரிந்தால், உங்கள் தூதுவர் அனைவரையும் இந்தியாவிலிருந்து திருப்பி பெற்று கொள்ளுங்கள். அப்படியானால் உங்கள் அடிக்கல் செய்யும் உளவு வேலையே செய்ய எங்கள் எதிரிக்கட்சிகள்தான் உங்களுக்காக இருக்கின்றனவே. இல்லாவிடில் காங்கிரஸ் தலைவர்கள் பாக்கிஸ்தான் வந்து உங்களை சந்திப்பார்களா ? கூடிய விரைவில் உங்களின் நிலைமை சீனாவிற்கும் வரும்.
Rate this:
Cancel
Ravi - Chennai,இந்தியா
25-ஜூன்-202012:47:41 IST Report Abuse
Ravi உங்க நிலைமை தான் சுத்த மோசம் , தினமும் 4 / 5 தீவரவாதி சாவரான் காங்கிரஸ் இருந்தவரை ஜாலியாக இந்தியாவில் குண்டு வைக்க அனுமதித்தான் இப்போ முடியலே , UN போய் ஒப்பாரி வை , ஒரு பய உங்களை நம்பமாட்டேன் , அடுத்தது சீனா அந்த லிஸ்டில் சேரும் .
Rate this:
Cancel
NARAYANA PRABHU KUMAR - madurai,இந்தியா
25-ஜூன்-202012:23:08 IST Report Abuse
NARAYANA PRABHU KUMAR இந்தியாவில் உள்ள எதிர் கட்சியியனரின் நிலையினை இப்படி வெட்ட வெளிச்சமாக இந்தியாவை எதிரியாக கருதும் பாகிஸ்தான் வெளிஉறவு பேசுவதை பார்த்தால் மிகுந்த வருத்தமும் அச்சமும் வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X