சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் திரும்புவதில் சிக்கல்; தொழில் துறையினர் கவலை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

பல்லடம் : புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தொழில் துறையினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், பனியன், ஜவுளி, கறிக்கோழி, தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு தொழில்கள் நடந்து வருகின்றன. 50 சதவீதத்துக்கும் மேல், வட மாநில தொழிலாளர்களை நம்பியே இவை நடக்கின்றன. ஊரடங்கினால், தொழிலாளர்கள் பெரும்பாலானோர், சொந்த ஊர் சென்றுவிட்டனர்.இதனால், தொழிற்சாலைகள், தொழிலாளர் இன்றி முடங்கி கிடக்கின்றன. இச்சூழலில், சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள், மீண்டும் பணிக்கு திரும்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.

தொழில் துறையினர் கூறியதாவது:டில்லி, மத்திய பிரதேசம், உ.பி., ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில், அதிகளவில் கொரோனா பரவி வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரித்து வருவதால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மீண்டும் பணிக்கு திரும்புவார்களா என்பது கேள்விக்குறிதான்.புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு, 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது. சொந்த ஊர் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊரிலேயே வேலை கிடைத்ததால், மீண்டும் இங்கு பணிக்கு திரும்புவது சந்தேகம்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும், வட மாநில தொழிலாளர்களை நம்பியே உள்ளன.இச்சூழலில், சொந்த ஊரிலேயே தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அமைந்ததாலும், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும், தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவதில் சிக்கல் உள்ளது.ஊரடங்கு காரணமாக நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், தொழிலாளர்களும் பணிக்கு திரும்பா ததால், உற்பத்தி மேற்கொள்ள முடியுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X