பொது செய்தி

தமிழ்நாடு

'பசங்களா... எப்படி இருக்கீங்க?'

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

திருப்பூர் : பள்ளி மாணவர்களின் தற்போதைய மனநிலையை ஆராய்ந்து, அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க கல்வித்துறை களமிறங்கியுள்ளது.

ஊரடங்கு நேரத்தில், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், பத்தாம் வகுப்பு பாடம் சம்பந்தமாக ஆலோசனைகளை வழங்கி வந்த, 'டேக் இட் ஈஸி' குழுவே, இப்பணியில் முழு வீச்சுடன் ஈடுபட்டு வருகிறது. இதற்கு, 92666 17888 என்ற எண்ணிற்கு, 'மிஸ்டு கால்' கொடுத்தால் போதும், அடுத்த சில நிமிடங்களில் அழைப்பு வரும்.அதில், ஒரு பெண்ணின் உரையாடல் துவங்கும். அதன்பின் விழிப்புணர்வு பாடல் ஒலிக்கும். பாடல் முடிவதற்குள், வீட்டில் உள்ள குழந்தைகளின் காதில், போனை வைக்கும்படி கேட்டு கொள்ளப்படும்.

பின் குழந்தைகளிடம் தற்போதையை தினசரி வாழ்க்கைமுறை, மனநிலை சார்ந்த கேள்விகள் கேட்பர். அதற்கு, விடையாக, குறிப்பிட்ட எண்ணை அழுத்த வேண்டும். இதன்மூலம் குழந்தைகளின் மனநிலையை ஆராய்ந்து, தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும்.இந்த இக்கட்டான சூழலில் குழந்தைகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல துடிக்கும் பெற்றோருக்கு, இது பயனுள்ளதாகவே இருக்கும். அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X