பத்திரப்பதிவு அலுவலகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பத்திரப்பதிவு அலுவலகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை மாயம்

Added : ஜூன் 25, 2020
Share

பல்லடம் : பல்லடம் பத்திர பதிவு அலுவலகத்தில், நோய் தடுப்பு நடவடிக்கை மாயமாகி உள்ளதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், அரசு அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்து உள்ளிட்டவை வழக்கம்போல் இயங்கி வருகின்றன. அவ்வகையில், பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகம், தற்போது மீண்டும் சுறுசுறுப்பாக செயல்பட துவங்கியுள்ளன. ஆனால், நோய் தடுப்பு நடவடிக்கை என்பது கேள்விக்குறியாக உள்ளது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், சானிடைசர், கை கழுவுவதற்கான வசதி உள்ளிட்ட எதுவும் அமைக்கப் படவில்லை.டோக்கன் அடிப்படையில் பத்திர பணிகள் மேற்கொள்ளப்படும் சூழலில், அதன்படியே பொதுமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆனால், ஒரே நேரத்தில் பலரும் உள்ளே செல்வதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும்.பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அரசு அலுவலகங்கள், அதிகாரிகளின் கடமை. ஆனால், அரசு அலுவலகமே இது போன்று இருப்பதால், மக்களுக்கு எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என, பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X