சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசுக்கு 'டிமிக்கி' கொடுக்கும் திருடர்கள்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

பொங்கலுார் : பொங்கலுார் பகுதியில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

பொங்கலுார், ஆண்டி பாளையத்தில், கடந்த 6ல் சந்திரிகா, 67 என்பவரிடம் முகமூடி அணிந்த இரு மர்ம நபர்கள், முகவரி கேட்பது போல் நடித்து, அவரது கழுத்தை நெறித்து, 30 பவுன் நகையை கொள்ளையடித்தனர். இதில், பல்லடத்தில் குடியிருந்த புருஷோத்தமன், 32 என்பவரை, போலீசார் கைது செய்தனர். ஆனால், முக்கிய குற்றவாளியான இவரது தந்தை செல்வராஜ் என்பவர் போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, சேமலை கவுண்டம்பாளையத்தில் துரைசாமி, 80 என்பவரை பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கி விட்டு, அவரது மகள் இந்திராணி, 50. கம்மல் மற்றும் தாலி கொடி ஆகியவற்றை அறுத்து கொண்டு இரண்டு மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த துரைசாமி மற்றும் இந்திராணி ஆகியோர் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் குற்றவாளிகள் பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். இவ்வாறு, அவிநாசி பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில், பெண்களிடம் மர்ம நபர்கள் கொலைவெறியுடன் தாக்கி நகைகளை பறித்துச் செல்வது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X