தமிழ்நாடு

படை பறக்குமா? ரோந்து பணிக்கு, 22 குழுக்கள் அமைப்பு .... மாவட்டத்தில் களமிறங்கிய அதிகாரிகள்

Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 படை பறக்குமா? ரோந்து பணிக்கு, 22 குழுக்கள் அமைப்பு ....  மாவட்டத்தில் களமிறங்கிய அதிகாரிகள்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், 87 அதிகாரிகள் அடங்கிய, 22 பறக்கும் படைகள் அமைத்து, நேற்று முதல், ரோந்து பணியை துவக்கியுள்ளன.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, எவ்வித அனுமதியும் பெறலாமல், ஆயிரக் கணக்கானோர், மாவட்டத்துக்குள் வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள், தாங்களாக முன்வந்து, கொரோனா பரிசோதனை செய்வது நலம்.மாறாக, இஷ்டத்துக்கு சுற்றினால், சமூக பரவலாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, ஒவ்வொரு குடிமகனும், சுய கட்டுப்பாட்டுடன், சமூக இடைவெளியை பின்பற்றியும், நோய் தடுப்பு விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சமூக விலகல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, மாவட்டத்தில், 22 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தாசில்தார் அல்லது துணை தாசில்தார் தலைமையில், போலீஸ் எஸ்.ஐ., மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.திருப்பூர் வடக்கு தாலுகாவில், மாநகராட்சி மண்டலம் 1 மற்றும் 2 என, தலா மூன்று பேருடனும், தெற்கில், மாநகராட்சி மண்டலம் 3 மற்றும் 4வது மண்டலத்தில், தலா மூன்று பேர், திருப்பூர் ஒன்றியத்தில், நான்கு பேர் என, ஏழு நபர்களுடன் மூன்று பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அவிநாசி தாலுகாவில், அவிநாசி, திருமுருகன்பூண்டி செயல் அலுவலர்கள், மண்டல துணை தாசில்திார், சிறப்பு எஸ்.ஐ., என, ஆறு பேர் அடங்கிய, இரண்டும், பல்லடம், தாராபுரம், உடுமலை, காங்கயம், வெள்ளகோவில் நகராட்சிகள், காங்கயம், குடிமங்கலம் ஒன்றியங்களில் தலா, மூன்று உறுப்பினர் கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளன.

பொங்கலுார், பல்லடம், வெள்ளகோவில், உடுமலை, மூலனுார், குண்டடம் ஒன்றியங்களில், நான்கு உறுப்பினர் கொண்ட பறக்கும் படைகளும், தாராபுரத்தில், ஆறு; ஊத்துக்குளியில், ஐந்து உறுப்பினர்களுடனும், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினர், நேற்று காலை முதல் தங்களது ரோந்து பணியை துவக்கியுள்ளனர். நிறுவனங்கள், கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தால் முதலில் எச்சரிக்கை வழங்கவும், தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு, 'சீல்' வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முக கவசம் அணியாமல் வெளியே வந்தாலும், பொது இடங்களில் எச்சில் துப்பினாலும், முதல்முறை, 100 ரூபாயும், இரண்டாவது முறை, 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து, விதிமுறையை பின்பற்றாதபட்சத்தில், போலீசார் வழக்கு பதிவு செய்வர் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மண்டபத்தில் கூட்டம் 'ஜோர்'வருவாய்த்துறையினர் 'கொர்ர்...'பெருமாநல்லுார் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில், பெருங்கூட்டத்தோடு திருமணம் நடந்து வருகிறது. குறிப்பாக, ஈட்டிவீரம்பாளையம் பிரிவிலுள்ள ஒரு மண்டபத்தில் ஒரு மாதமாகவே, அனைத்து முகூர்த்தங்களில், நல்ல கூட்டத்துடன் திருமணம் நடந்துள்ளது.

ஊரடங்கு நேரத்தில், விதிக்கப்பட்ட தளர்வு விதிமுறை தாண்டி, இவ்வாறு நடப்பதாக தன்னார்வலர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். இதனை கண்காணிக்க வேண்டிய, வருவாய்த் துறை அதிகாரிகளும், போலீசாாரும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள 'பறக்கும் படை'யாவது, இதுபோன்ற சமூக இடைவெளியின்றி மக்கள் கூடுவதை தடுத்தும், சம்பந்தப்பட்ட நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்தும், கொரோனா குறித்த விழிப்புணர்வை அவசியம் ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூன்-202006:30:14 IST Report Abuse
ஆப்பு இவிங்கள்ள சிலர் நல்லா வயிறார சாப்புடற மாதிரி இருக்கே..
Rate this:
Cancel
25-ஜூன்-202006:29:13 IST Report Abuse
ஆப்பு பறக்கும் படை படத்தைப் பாருங்க. அவிய்ங்க பறந்துக் கிட்டே இருப்பாங்க. கொரோனா அவிய்ங்களை தொற்றாது. ஆகவே மாஸ்க் எல்லாம் அணியத் தேவையில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X