அத்திக்கடவு திட்ட பணியாளருக்கு தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அத்திக்கடவு திட்ட பணியாளருக்கு தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை

Added : ஜூன் 25, 2020
Share
அவிநாசி : அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு, கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் வகையில், தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நடந்து வருகிறது. பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் மேற்பார்வையில், எல் அண்ட் டி

அவிநாசி : அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு, கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் வகையில், தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நடந்து வருகிறது. பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் மேற்பார்வையில், எல் அண்ட் டி நிறுவனத்தினர், இப்பணியை மேற்கொள்கின்றனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, மீண்டும் பணி நடந்து வருகிறது.

கட்டுமான பணி மேற்கொள்ளும் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் மற்றும் தொழிலாளர், தேவையான இடங்களுக்கு பணி மாறுதல் செய்யப்படுகின்றனர். அவ்வாறு பணி மாறுதல் பெற்று வருவோர், அந்த இடத்தில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், 'அத்திக்கடவு திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள், இடமாறுதல் செய்யப்படும் போது உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அனுமதி சான்று பெற்ற பிறகே பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். இருப்பினும், பணிபுரியும் இடத்தில் முன்னெச்சரிக்கையாக, 14 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X