பொது செய்தி

தமிழ்நாடு

சரிவிலிருந்து மீளும் நுால் வர்த்தகம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

திருப்பூர் : திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்டர் வர துவங்கியுள்ளதால், தமிழக நுாற்பாலைகளில், ஒசைரி நுால் வர்த்தகம் மீண்டெழுகிறது.

கொரோனாவால், நுாற்பாலை முதல் ஆடை உற்பத்தி வரையிலான அனைத்து நிறுவனங்களும் இயக்கத்தை நிறுத்தின. இதனால், ஆடை உற்பத்தி நிறுவனங்கள் போன்று, நுாற்பாலைகளும், வர்த்தகத்தை இழந்து, மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வால், மே மாதம் முதல், தமிழக நுாற்பாலைகள் மீண்டும் இயக்கத்தை துவக்கியுள்ளன.வர்த்தகம் இல்லாததால், கடந்த 1ம் தேதி, நுால் விலை கிலோவுக்கு, 10 ரூபாய் குறைக்கப்பட்டது. திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளிலிருந்து ஆர்டர்கள் வரத்துவங்கி உள்ளன.

சேம்பிள் ஆடை தயாரிப்பு, மொத்த ஆடை தயாரிப்பு, துணி முக கவசம் தயாரிப்பு பணிகள் நடந்துவருகின்றன. இதனால், நுாற்பாலைகளின் ஒசைரி நுால் வர்த்தகம் அதிகரித்துள்ளது. இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் கூட்டமைப்பு உறுப்பினர் சரவணன் கூறியதாவது: வெளிநாடுகளிலிருந்து பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் ஆர்டர் வரத்துவங்கி யுள்ளன; ஒசைரி நுால் வர்த்தகம் உயர்வுக்கு இதுவே முக்கிய காரணம்.பல்லடம், சோமனுார், பிவாண்டி பகுதி விசைத்தறிகள் இன்னும் இயக்கத்தை துவக்கவில்லை. அதனால், வார்ப் நுால் வர்த்தகம் மிகவும் மந்தமாகவே உள்ளது.வர்த்தகம் உயர்வுக்கு ஏற்ப, நுாற்பாலைகள், உற்பத்தியையும் அதிகரித்துவருகின்றன. தற்போது, 46 சதவீத நுால் உற்பத்தி என்கிற நிலையை தமிழக நுாற்பாலைகள் எட்டியுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X