பொது செய்தி

தமிழ்நாடு

நோய் தடுப்பு நடவடிக்கை ஆய்வில் அதிகாரி 'அட்வைஸ்'

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

பல்லடம் : நோய் தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என, ஆய்வில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையிலான குழுவினர், பல்லடத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.திருச்சி ரோட்டில் உள்ள பேக்கரி, ஓட்டல், மளிகை கடை என, 22 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில், கெட்டு போன காய்கறிகள், காலாவதியான உணவு பொருட்கள் உள்ளிட்டவை பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன. உரிமம் பெறாமல் உணவு வணிகம் செய்துவந்த நான்கு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவதுடன், தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். பணியாளர்கள் சுத்தமாக இருப்பதுடன், பிளேட், டேபிள்கள் உள்ளிட்டவற்றை சோப்பு நீரால், அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வருவோர் குறித்த விவரங்களை தெரிவிப்பது அவசியம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், செயற்கை நிறமூட்டிகள், சுவையூட்டிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என்பது உட்பட அறிவுரைகள் வழங்கப்பட்டன.பல்லடம் நகர உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கேசவராஜ், சதீஷ்குமார் மற்றும் பாலமுருகன் ஆய்வில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X