பொது செய்தி

தமிழ்நாடு

செயற்கை இழையில் ஆடை; கவனம் செலுத்த அறிவுரை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை நிறுனங்கள் செயற்கை இழை ஆடை உற்பத்தியை பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

வர்த்தக போட்டிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், திருப்பூரில் சில நிறுவனங்கள் மட்டும், சர்வதேச சந்தையில் அதிகம் தேவையுள்ள செயற்கை இழை ஆடைகள் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகின்றன.அமெரிக்கா, ஐரோப்பா உட்பட அனைத்து நாடுகளின் ஆடை வர்த்தக சந்தையில் பெரும்பகுதியை சீனா வசப்படுத்தியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக, பெரும்பாலான நாடுகள், அந்நாட்டுக்கு எதிரான மனநிலையிலேயே உள்ளன.

இதனால், இந்தியா, வியட்நாம், வங்கதேசம், கம்போடியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளின் நிறுவனங்களுக்கு, அதிகளவு ஆர்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:இதுவரை சீனாவுக்கு அளித்துவந்த முன்னுரிமையை, பெரும்பாலான நாடுகள் விலக்கிக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கா, ஐரோப்பா உட்பட அனைத்து நாடுகளும், இந்தியாவுடன் சிறந்த நட்புறவு கொண்டுள்ளன.எனவே, இந்திய நிறுவனங்களுக்கு அதிகளவு வர்த்தக வாய்ப்புக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக, ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, வரும் 2021ம் ஆண்டு, பிரகாசமாக அமையும் என வல்லுனர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.குறிப்பிட்ட சில நிறுவனங்களே செயற்கை இழை ஆடை தயாரிப்பில் முழுமையாக ஈடுபட்டுள்ளன. அதிலும், விஸ்கோஸ் ஆடை தயாரிப்பு மட்டுமே அதிகம் நடக்கிறது. வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு, வழக்கமான பருத்தி ஆடை தயாரிப்பு மட்டும் பலனளிக்காது.'ஆக்டிவ்- வியர்' எனப்படும், விளையாட்டு, யோகா, உடற்பயிற்சி ஆடைகள் தேவை, சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.

இதுவே சரியான தருணம்; அனைத்து நிறுவனங்களும், நைலான், பாலியெஸ்டர் உட்பட எல்லாவகை செயற்கை இழை ஆடை தயாரிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X