பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் விலை ஊரடங்கில் மட்டும் ரூ.5,656 உயர்வு

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Gold, Gold Price, lockdown, coronavirus lockdown, தங்கம், விலை, ஊடரங்கு, உயர்வு

சென்னை : தமிழகத்தில், நான்கு மாதங்களில் மட்டும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 5,656 ரூபாய் அதிகரித்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில், நேற்று(ஜூன் 24) சவரன் விலை, 37 ஆயிரம் ரூபாயை தாண்டியது.

சீனா மீது, கடும் கோபத்தில் உள்ள அமெரிக்கா, சீன பொருட்களுக்கு அதிக வரி விதித்து வருவதுடன், அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும், தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக, உலக பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருவதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.

இந்தியாவில், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச், 24ல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில், அம்மாதம், 23ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 3,952 ரூபாய்க்கும்; சவரன், 31 ஆயிரத்து, 616 ரூபாய்க்கும் விற்பனையானது. நகை கடைகள் மூடப்பட்டாலும், தினசரி தங்கம் விலை தொடர்பான விபரங்கள், வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டன.


latest tamil news


தமிழகத்தில், இம்மாதம், 22ம் தேதி, கிராம் தங்கம், 4,610 ரூபாய்க்கும்; சவரன், 36 ஆயிரத்து, 880 ரூபாய்க்கும் விற்பனையானது. இதுவே, தங்கம் விலையில் உச்ச அளவு. நேற்று முன்தினம், தங்கம் விலையில் மாறுதல் இல்லை. வெள்ளி கிராம், 53.60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் கிராமுக்கு, 49 ரூபாய் அதிகரித்து, 4,659 ரூபாய்க்கு விற்பனையானது. சவரன், 392 ரூபாய் அதிகரித்து, முதல் முறையாக, 37 ஆயிரத்து, 272 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு, 10 காசுகள் குறைந்து, 53.50 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து, ஊரடங்கு அமல்படுத்தியதில் இருந்து, நான்கு மாதங்கள் முடிவடைந்த நிலையில், எப்போதும் இல்லாத வகையில், தங்கம் கிராமுக்கு, 707 ரூபாயும்; சவரனுக்கு, 5,656 ரூபாயும் அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
25-ஜூன்-202014:37:56 IST Report Abuse
மனிதன் அட தங்கத்த விடுப்பா... மத்ததெல்லாம்.., நான் பதிந்ததை முழுவதுமாக படி....இல்லாவிட்டாலும் நீங்கெல்லாம், சிந்திக்காமல் உணர்ச்சிவசப்படத்தான் லாயக்கு....
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
25-ஜூன்-202013:18:06 IST Report Abuse
மனிதன் அனைத்து பொருட்களின் விலையும் விண்ணில் முட்டி நிற்கும்போது, தங்கம் மட்டும் விதிவிலக்கா என்ன? விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது.. இதையெல்லாம் அறியாத(?) அரசு.., கார்ப்ரேட்களின் நலனையே முக்கியமாக கருதுகிறது...கவர்ச்சி வாசகங்களையும், உணர்ச்சிகரமான செய்திகளையும்,பரபரப்பான சூழ்நிலைகளையும் உருவாக்கி.., நாட்டின் உண்மை நிலையையும், தங்கள் வாழ்வாதாரத்தின் சிந்தனையையும் விட்டு மக்களை திசை திருப்புகிறது...மக்கள் சிந்திக்க துவங்கினாள் ஒழிய இதெல்லாம் நடந்துகொண்டேதான் இருக்கும்....
Rate this:
25-ஜூன்-202013:38:46 IST Report Abuse
ஆரூர் ரங்மூலப் பத்திர நாளிதழ் படிச்சா இப்படிதான் எழுதத் தோன்றும்.. ஒண்ணு புரியணும். உள்ளூர் டிமாண்டால் இங்கு ஏறுவது மிகக் குறைவுதான். உலகச் சந்தை விலையை ஒட்டித்தான் இங்கும் ஏறுகிறது. சென்ற ஒராண்டில் மட்டும் உலக தங்க மார்கெட்டில் 33.4 விலையுயர்வு . அதுக்குக்கூட மோதியும் எடப்பாடியுமா காரணம்?...
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
25-ஜூன்-202012:28:59 IST Report Abuse
Nallavan Nallavan நாம் இதற்காக இந்த அரசை குறை சொல்ல முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X