சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஈரோடு ஜவுளி சந்தை எப்போது செயல்படும்?

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

திருப்பூர் : ஈரோடு ஜவுளி சந்தை செயல்பாட்டுக்கு வராததால், வர்த்தகம் பாதிப்பதாக, திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாவட்டம், வெளிமாநில வர்த்தகர்கள் அதிகளவில், ஈரோடு வாரச்சந்தையில், ஆடை ரகங்கள் வாங்கி செல்வது வழக்கம். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடக்கும் இந்த சந்தையில் உள்ள கடைகளில், திருப்பூர் பகுதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள்; வர்த்தகர்கள், ஆடைகளை எடுத்துச்சென்று, விற்பனை செய்கின்றனர்.கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச் மாத இறுதியில், ஈரோடு ஜவுளிச்சந்தை மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வு அளித்ததையடுத்து, திருப்பூரில், ஆடை உற்பத்தி துவங்கியுள்ளது. வெளிமாநிலங்களுக்கான ஆடை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அருகாமையில் உள்ள சந்தைகளில், ஆடைகளை விற்பனை செய்ய, ஆடை உற்பத்தி துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

காதர்பேட்டை கடைகள் திறக்கப்பட்டு, ஆடை வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஆனால், ஈரோடு ஜவுளி சந்தை, இன்னும் இயக்கத்துக்கு வரவில்லை. ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன; பெரும்பாலான கடைகள் இயக்கத்துக்கு வரவில்லை. ஈரோடு சந்தைக்கு ஆடைகளை கொண்டுசென்று விற்பனை செய்ய முடியாத நிலை தொடர்வது, ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களை கவலை அடைய செய்துள்ளது. ஆடை வர்த்தகர்கள் கூறுகையில், திருப்பூர் பின்னலாடைகளுக்கு, ஈரோடு ஜவுளி சந்தை மிகப்பெரிய வர்த்தக மையாக உள்ளது.

கேரள வர்த்தகர்கள் அதிகளவில் இங்குவந்து ஆடைகளை மொத்தமாக கொள்முதல் செய்வர்.கொரோனாவால் மூடப்பட்ட சந்தை, இன்னும் செயல்பாட்டை துவங்கவில்லை. இதனால், ஈரோடு சந்தையை சார்ந்த பல கோடி ரூபாய் பின்னலாடை வர்த்தகம் பாதிக்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X