பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மைதானம் 'பளிச்'

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

பல்லடம் : தன்னார்வலர்கள் பங்களிப்புடன், பல்லடம் அரசு பள்ளி மைதானம், சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், விளையாட்டு மைதானங்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன. இதனால், பயன்பாடற்ற மைதானங்கள், புல் பூண்டுகள் முளைத்து, புதர்களாக மாறி வருகின்றன. பல்லடம் அரசு பள்ளி மைதானத்தை, ஏராளமானோர், நடைப்பயிற்சி, மற்றும் விளையாட்டு போட்டிகளுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல், பயன்பாடின்றி கிடந்த அரசு மேல்நிலைப் பள்ளி மைதானம், புற்கள் முளைத்து காணப்படுகிறது.

ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால், நடைப்பயிற்சி, மற்றும் விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ள பொதுமக்கள் மீண்டும், அரசு பள்ளி மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வகையில், பல்லடம் அரசு பள்ளி மைதானத்தை, தன்னார்வலர்கள் சிலர் சுத்தம் செய்து வருகின்றனர். இதனால், மைதானம் சுத்தமாக காட்சியளிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X