பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாவட்டங்களுக்கு செல்ல 'இ-பாஸ்' கட்டாயம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

திருப்பூர் : தமிழக அரசு, வெளிமாவட்டங்களுக்கு செல்ல 'இ-பாஸ்' கட்டாயம் என அறிவித்துள்ளது.

மாவட்டத்துக்குள் சென்றுவர தடையில்லை. அரசு அறிவிப்பால், வெளிமாவட்ட எல்லைகளில் இருந்து, திருப்பூர் வேலைக்கு வரும் தொழிலாளர்கள், உடனடியாக பாஸ் பெற, கலெக்டர் அலுவலகம் குவிந்தனர். பனியன் நிறுவன உரிமையாளர்களே, 'இ-பாஸ்' விண்ணப்பித்து,தொழிலாளர்களை கலெக்டர் அலுவலகம் அனுப்பி வைத்தனர். வேலைக்கு வரமுடியாது என்று அஞ்சிய தொழிலாளர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாமல், கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் சேர்ந்து நின்றனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அலுவலகம், பொதுக்கூட்டம் நடக்கும் இடம் போல், காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X