பொது செய்தி

தமிழ்நாடு

கடை செயல்படும் நேரம் வியாபாரிகள் அறிவிப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

பொங்கலூர் : பொங்கலூரில் நடந்த வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கடை செயல்படும் நேரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது.

பொங்கலூர் அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில், அடுத்த மாதம், 15ம் தேதி வரை கடைகள் செயல்படும் நேரத்தை குறைப்பது; வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன்படி, பால் விற்பனை நிலையங்கள் காலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரையும், பேக்கரி மற்றும் ஓட்டல் காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரையும், இறைச்சி கடைகள் காலை, 6:00 முதல் மதியம், 12:00 மணி வரையும், மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை, 8:00 முதல் மாலை, 5:00 மணி வரை மட்டுமே செயல்படும் என்று முடிவு செய்யப்பட்டது. மருந்து கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

கூட்டத்தில், பொங்கலுார் வட்டார அனைத்து வியாபாரிகள் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X