சம்பவம் செய்தி

தமிழ்நாடு

32 குழந்தை திருமணம்  அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

திருப்பூர் : கொரோனா ஊரடங்கு காலத்தில், 32 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்ட சமூக பாதுகாப்பு துறையினர் கூறியதாவது:மாவட்டத்தில், கடந்த மார்ச், 24ம் தேதி முதல் இம்மாதம், 23ம் தேதி வரை, 32 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளன. அதன்படி, கம்யூனிட்டி சர்வீஸ் ரெஜிஸ்டர் என்ற பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உடுமலை, குன்னத்துார், அவிநாசி உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில் அதிகப்படியான குழந்தைகள் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இரு வழக்குகளில் மட்டுமே ஆணும், பெண்ணும் மைனராக இருந்தனர். மீதமுள்ள, 30 வழக்குகளில், பெண் மைனராக இருந்துள்ளார்.

இதேபோல், குழந்தை திருமணம் எங்காவது நடத் ஏற்பாடு செய்தாலோ அல்லது நடந்தாலோ, 1098 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X