சம்பவம் செய்தி

தமிழ்நாடு

14 ஆயிரத்து, 470 பேருக்கு கொரோனா பரிசோதனை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், பரிசோதனை ஆய்வகம் திறந்த பிறகு, 14 ஆயிரத்து, 470 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

மே மாத இறுதியில் இருந்து திருப்பூரிலேயே பரிசோதனை நடந்து வருகிறது. தினமும், 150 நபர்களுக்கு பரிசோதனை நடந்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களாக, 600 நபர்கள் வரை பரிசோதனை நடத்தப்படுகிறது. சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து, திருப்பூர் வரும் அனைவருக்கும் பரிசோதனை நடக்கிறது.கடந்த, 10 நாட்களாக அதிகப்படியான மக்கள் வருவதால், 'இ-பாஸ்' மூலம் வரும் அனைவருக்கும், பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை, 14 ஆயிரத்து, 470 நபர்களுக்கு பரிசோதனை நடந்துள்ளது.

கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி ஆய்வகத்தில், அதிகபட்சமாக, 630 நபருக்கு ஒரே நாளில் பரிசோதனை நடந்துள்ளது.கடந்த சில நாட்களாக, தினமும், 500 முதல், 600 நபர்கள் வரை, பரிசோதனை நடக்கிறது. திருப்பூரில் இதுவரை, 14 ஆயிரத்து, 470 நபர்களுக்கு பரிசோதனை நடந்துள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X