பொது செய்தி

தமிழ்நாடு

மழை பெய்த பகுதியில் தக்காளி நாற்றங்கால் பணி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

உடுமலை : திருப்பூர் மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் அறிக்கையானது, கோவை வேளாண் பல்கலை., யின், காலநிலை ஆராய்ச்சி மையம் மூலம், உழவன் மொபைல் செயலி மூலம் வெளியிடப்படுகிறது.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், இவ்வாரத்தில், மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்ப நிலை, 32 டிகிரி செல்சியஸாகவும், காலை நேர காற்றின் ஈரப்பதம், 90 சதவிகிதமாகவும், இருக்க வாய்ப்புள்ளது. காற்றின் வேகம், மணிக்கு, 16 கி.மீ., அளவுக்கு பெரும்பாலும், தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். மிதமான மழையுடன், வேகமான காற்றும் எதிர்பார்க்கப்படுவதால், 5 மாதங்களுக்கு மேலான, வாழை மரங்களுக்கு, முட்டுக்கொடுக்க வேண்டும்.

பெய்துள்ள மழையை பயன்படுத்தி, வாய்க்கால் பாசனப் பகுதிகளில், ஆக., மாதத்தில், நெல் நடவு செய்யும், விரும்பும் விவசாயிகள், தக்கை பூண்டு, கொழுஞ்சி, சணப்பை போன்ற பசுந்தாள் உரங்களை விதைத்து, 45 நாட்கள் கழித்து, அந்த இடத்திலேயே உழுவதன், மூலம் மண்ணின் அங்ககத்தன்மையை அதிகப்படுத்தலாம்.தக்காளி நாற்றங்கால் அமைக்க, இது நல்ல தருணமாகும். விதைப்பதற்கு, 24 மணி நேரத்துக்கு முன், ஒரு கிலோ விதைக்கு, 4 கிராம் டிரைக்கோடெர்மாவிரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.இதுவரை மழை பெறப்பட்ட பகுதிகளில், தென்னைக்கு உரமிடலாம். மழை இல்லாவிட்டால், உரமிடுவதற்கான முதற்கட்ட பணிகளை துவக்கலாம். தென்னைக்கு உரமிட, மரத்திலிருந்து, 1.8 மீ., தள்ளி, அரை வட்ட வடிவில் குழி எடுக்க வேண்டும்.தென்னைக்கு உரமிடுதலை, ஜூன், ஜூலை, அக்., மற்றும் நவ., மாதங்களில் திட்டமிட வேண்டும். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X