வாடகைக்கு அரசு பஸ் அதிகாரிகள் அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாடகைக்கு அரசு பஸ் அதிகாரிகள் அழைப்பு

Added : ஜூன் 25, 2020
Share

உடுமலை : நஷ்டத்தைத் தவிர்க்கும் முயற்சியாக, வாடகைக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து, போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:பஸ்கள் இயக்கப்படாததால், ஊரடங்கின்போது தினமும், 10 கோடி ரூபாய்க்கு மேல், வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது, பஸ்கள் இயக்கப்பட்டாலும், சமூக இடைவெளி மற்றும் குறைந்தளவே இயக்கப்படுவதாலும் போதிய வருவாயை பெற முடியவில்லை.மண்டலங்களுக்குள் குழுவாக பயணிப்போர், பிற மண்டலங்களுக்கு செல்வோருக்கு, (இ- பாஸ் உடன்), பஸ்களை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், நஷ்டத்தை ஓரளவு தவிர்க்கலாம். இருப்பினும், இத்திட்டத்துக்கு போதுமான வரவேற்பு இன்னும் கிடைக்கவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X