பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டப்பணிகள்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

உடுமலை : ஊராட்சிகளில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் மத்திய அரசின் திட்டப்பணிகள் துவங்கியுள்ளன.

மத்திய அரசின், ஜல்சக்தி அமைச்சகம், 2026ம் ஆண்டுக்குள், அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் அடிப்படையில், ஊராட்சிகளில், குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை அதிகாரிகள் துவக்கியுள்ளனர். ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:முதற்கட்டமாக, 2.5 லட்சம் ஊராட்சிகளில், இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மழைநீர் சேமிப்பு, நீர் மறுசுழற்சி, சாக்கடை வசதி உள்ளிட்டவையும் கவனத்தில் கொள்ளப்படும். இதற்கு 32 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

கொரோனா பரவல் ஒருபுறம் இருந்தாலும், சமூக இடைவெளி கடைபிடித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், கிராமங்களில், குடிநீர் இணைப்புப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு நடைபெற்றால், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், அந்தந்த உள்ளாட்சிகளில், திட்டப்பணிகள் தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X