நியூயார்க்கில் பிடனுக்கு வெற்றி| Joe Biden wins New York primary | Dinamalar

நியூயார்க்கில் பிடனுக்கு வெற்றி

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (6)
Share

வாஷிங்டன்; அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலுக்கு, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ள, முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன், நியூயார்க்கில் நடந்த கட்சியின் பிரைமரி தேர்தலில் வெற்றி பெற்றார்.



latest tamil news


அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், இந்த தாண்டு, நவ.,3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சியின் சார்பில், அதிபர், டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். ஜனநாயகக் கட்சியில் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான போட்டியில் பலர் இருந்தனர்.கடைசியில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன், செனட், எம்.பி.,யான பெர்னி சான்டர்ஸ் போட்டியில் இருந்தனர். சாண்டர்சும் ஆதரவு தெரிவித்து போட்டியில் இருந்து விலகி கொண்டார். கட்சி வேட்பாளராவதற்கு தேவையான ஆதரவு, பிடனுக்கு ஏற்கனவே கிடைத்துவிட்டது.

இந்நிலையில், நியூயார்க்கில் நடந்த பிரைமரி தேர்தலிலும் அவர் அபாரமாக வென்றார். ஜனநாயகக் கட்சி மிகவும் வலுவான மாகாணங்களில், நியூயார்க்கும் ஒன்று.கடந்த சில ஆண்டுகளாக, அரசியலில் தீவிரம் காட்டாமல் இருந்த முன்னாள் அதிபர், பராக் ஒபாமா, தற்போது, ஜோ பிடனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.


latest tamil news




அதிருப்தி


பிடனுக்கு தேர்தல் நிதி திரட்டும் மாநாட்டுக்கு முன்னதாக, 1.75 லட்சம் பேரிடம் இருந்து, 57.50 கோடி ரூபாயை, ஒபாமா திரட்டியுள்ளார்.'இது மக்களிடம் அவருக்கு உள்ள மதிப்பு, செல்வாக்கை உணர்த்துவதாக உள்ளது' என, ஜோ பிடன் தரப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.டிரம்ப் பங்கேற்ற, அதிபர் பதவிக்கான தேர்தல் பிரசார பேரணிகளில் கூட்டம் அதிகம் வராததால், அவர் அதிருப்தி அடைந்தார். இந்நிலையில், எம்.பி., பதவிக்காக, கட்சியின் வேட்பாளர் தேர்வில், அவர் பரிந்துரைத்த இருவர் தோல்வியடைந்துஉள்ளனர். இது டிரம்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கென்டகி மற்றும் நியூ கரோலினாவில், எம்.பி., பதவிக்கான கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது. இதில், டிரம்ப் ஆதரவாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.இந்தியர்கள் ஆதரவுஅமெரிக்க அதிபர் தேர்தலின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக, இந்தியர்களின் ஓட்டு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 'டெக்சாஸ், மிச்சிகன், புளோரிடா உள்பட பல மாகாணங்களில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டே, வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும்' என, டிரம்பின் பிரசார குழுவைச் சேர்ந்த, அமெரிக்க வாழ் இந்தியரான, அல் மசான் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X