பொது செய்தி

தமிழ்நாடு

பறக்கும் படை! மூன்று துறைகளின் அதிகாரிகளை கொண்ட...முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

உடுமலை : முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கவும், சுகாதாதார நடவடிக்கை எடுக்காத கடைகள், வணிக நிறுவனங்களை கண்காணித்து 'சீல்' வைக்கவும், வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் மற்றும் போலீசாரைக்கொண்ட பறக்கும் படை குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 24 முதல் வரும், 30 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும் போது, முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. முதல் முறை, 100 ரூபாய் அபராதம், இரண்டாம் முறை, 500 ரூபாய், மூன்றாம் முறை போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜவுளி, மளிகை, நகை, காய்கறி கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களிலும், பணியாளர்கள் மற்றும் கடைக்கு வரும் பொதுமக்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், தனி நபர் இடைவெளி பராமரித்தல், சானிடைசர், கை கழுவுதல் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.முகக்கவசம் அணியாமல், சுற்றுபவர்கள், வாகனங்களில் வருவோரை கண்காணித்து, அபராதம் விதிக்கவும், சுகாதார நடவடிக்கைகளை கடைகள், வணிக நிறுவனங்கள் மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையிலும், மீறும் கடைகளுக்கு 'சீல்' வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வருவாய்த்துறை, போலீசார் மற்றும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளை கொண்ட பறக்கும் படை அமைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, மாவட்டத்தில், 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வருவாய்த்துறை அதிகாரிகள், உடுமலை நகராட்சி அதிகாரிகள், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள், தளி, கணியூர், மடத்துக்குளம், சங்கராமநல்லுார், குமரலிங்கம் பேரூராட்சி செயல் அலுவலர்கள் என, 17 அதிகாரிகளை கொண்ட, பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று இக்குழுவினர் நுாற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.அதிகாரிகள் கூறுகையில், 'வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் மற்றும் போலீசாரை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு, முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை கடை பிடிக்காக, கடைகள், வணிக நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X