பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு புனரமைப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

உடுமலை : மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைத்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகளை உள்ளாட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில், விவசாயம் உட்பட பல்வேறு தேவைகளுக்கு நிலத்தடி நீரை பெற, 1,200 அடி வரை போர்வெல்கள் அமைக்கப்படுகின்றன. அவ்வகையில், 1.50 லட்சம் போர்வெல்கள் வரை அமைக்கப்பட்டுள்ளதாக, சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. அதிகப்படியாக, நிலத்தடி நீரை உறிஞ்சியதால், பல்வேறு ஒன்றியங்களில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. ஆண்டுதோறும் வறட்சியால், தென்னை மரங்கள் காய்வது, குடிநீர் தட்டுப்பாடு என உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.

கிராமங்களிலுள்ள, குளம் மற்றும் குட்டைகளும் பராமரிப்பு இல்லாமல், கிடைக்கும் மழைநீரும் வீணாகிறது. பருவமழைகள் பெய்தாலும், மழை நீரை சேகரிக்காதது ஆண்டுதோறும் சிக்கலை அதிகரித்து வருகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன், மழை நீர் சேகரிப்புக்கான சிறப்புத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.அதன்படி, அரசு கட்டடங்கள், கோவில்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளிலும், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது. புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு அனுமதி பெற கட்டாயமாக்கப் பட்டது. சிறப்பாக துவங்கிய இத்திட்டம் பின்னர் கண்டுகொள்ளப்படவில்லை.

அரசு அலுவலகங்களில் கூட மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் காணாமல் போய் விட்டன. பல இடங்களில், பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்துள்ளன.நீராதாரங்களான, குட்டைகள், ஓடைகள் ஆகியவையும் துார்வாரப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில், மழை நீர் வீணாகிறது. உடுமலை பகுதியில் பரவலாக பெய்து வரும் கோடை மழையை தொடர்ந்து தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது. இந்த சீசனில் கிடைக்கும் மழை நீரை சேகரித்தால், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க முடியும்.

கிணறு மற்றும் போர்வெல்களில், நீர் மட்டம் உயர்ந்து விவசாயமும் பாதுகாக்கப்படும். எனவே, உள்ளாட்சி அமைப்பினர் உடனடியாக மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும்.இதற்கான கண்காணிப்பை ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X