பொது செய்தி

தமிழ்நாடு

தொழில்நுட்பத்தால் மாசாகுபடியில் கூடுதல் மகசூல்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

உடுமலை : மாசாகுபடியில், அடர்வு நடவு முறை; சொட்டு நீர் பாசனம் உட்பட தொழில்நுட்பங்களை பின்பற்றுவதால், ஒரு ெஹக்டேருக்கு, 30 டன் வரை கூடுதல் மகசூல் கிடைக்கும் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில், மா சாகுபடி அதிகளவு உள்ளது. தற்போது தோட்டக்கலைத்துறை மானியத்திட்டங்கள் மூலம் பிற பகுதிகளிலும், இச்சாகுபடியை மேற்கொள்ள ஊக்கம் அளிக்கப்படுகிறது.இதே போல், புதிதாக மா சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டுள்ள விவசாயிகள், பரிசீலிக்க வேண்டிய தன்மைகள் குறித்தும், தோட்டக்கலைத்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.அதன்படி, மா பலதரப்பட்ட, மண் வகைகளிலும், வளரும் இயல்புடையது. அதிகப்படியான களிமண், மணற்பாங்கான மண், பாறைகளுடன் கூடிய சுண்ணாம்பு, காரத்தன்மை மற்றும் தண்ணீர் தேங்கும் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்புடையதல்ல. மண்ணின் கார அமிலத்தன்மை, 6.5 முதல் 7.5 வரை உள்ள மண்ணில் மாமரங்கள் நன்கு வளரும்.

மா அடர் நடவு முறையில், அல்போன்ஸா, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த், பெங்கரூரா போன்ற ரகங்களை சாகுபடி செய்யலாம். இம்முறையில், 5 மீட்டருக்கு, 5 மீ., இடைவெளியில், ெஹக்டேருக்கு, 400 செடிகள் நடவு செய்யலாம்.மழைக்காலம் துவங்கும் போது, ஆரம்பித்து, டிச., மாதம் வரை நடவு செய்வது நல்லபடியான நாற்று வளர்ச்சிக்கு உதவுகிறது. செடிகள் நடப்பட்ட உடன் உயிர் நீர் பாய்ச்சுவது மிக முக்கியமானதாகும். சொட்டு நீர் பாசனம் அமைத்தால், செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.புதிதாக நடப்பட்ட கன்றுகளை வறண்ட வெப்பமான காற்றில் இருந்து பாதுகாக்க, சணப்பு செடிகளை மாங்கன்றுகளை சுற்றி விதைத்து, பின்னர், அவற்றை பசுந்தாள் உரமாக மண்ணில் புதைத்து விட வேண்டும்.

நடப்பட்ட செடிகள், 46--60 செ.மீ., வளர்ந்தவுடன், நுனி மொட்டுகளை, 5-6 செ.மீ., இருக்குமாறு நுனியில், இருந்து கிள்ளி பக்க கிளைகள் வளருமாறு செய்ய வேண்டும்.அடர் நடவு முறையில், மா சாகுபடி செய்வதால், 8 ஆண்டுகளில், முழு உற்பத்தி திறனை எட்டுகிறது. சராசரியாக ஒரு எக்டருக்கு, 25 முதல் 30 டன்கள் வரை மகசூல் கிடைக்கும். கவாத்து, பயிர்பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதால், அறுவடை முதலான பணிகள் எளிதாகி, மகசூல் இரு மடங்கு கூடுதலாக கிடைக்கும்.இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X