பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கடலை சாகுபடியில் அதிக உற்பத்தி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

மடத்துக்குளம் : ஒரு ஏக்கர் பரப்பில் நல்ல விதைப்பு தன்மையுடைய முழுமையான நிலக் கடலை உற்பத்தி செய்வது குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த ராஜா வெளியிட்ட அறிக்கை:நிலக்கடலை பயிரை மானாவாரியாகவும், இறவைப் பயிராகவும் சாகுபடி செய்யலாம். இப்பயிரானது அதிகப்படியான கந்தக சத்தை உட்கிரகித்து நல்ல திரட்சியான பருப்புகளை உருவாக்கும். டிஎம்யு 18 ரகம் 120 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய பயிராகும். ஒரு ஏக்கருக்கு, 40 கிலோ பருப்பு விதைப்புக்கு தேவைப்படும் 1,500 முதல் 1,600 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.நிலக்கடலை சாகுபடி செய்ய, நன்கு முற்றிய திரட்சியான முழுமையான பருப்புகளை தேர்வு செய்து பரிசோதித்து வாங்க வேண்டும். பின்பு, 200 கிராம் சூடோமோனாஸ் பூஞ்சையுடன் சேர்த்து, 40 கிலோ நிலக்கடலை பருப்பை கலந்து, இரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நன்றாக உழுது நிலத்தை செம்மைப்படுத்த வேண்டும். பின், 5 டன் மக்கிய தொழு உரம் இடவேண்டும். ஒரு ஏக்கருக்கு சூடோமோனாஸ் பூஞ்சை, 5 கிலோ இட்டு சமமான பாத்திகள் அமைக்க வேண்டும். கடைசி உழவின் போது பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து 50 சதவீதம் மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து 100 சதவீதம் ஆகியவற்றை நிலத்தில் இட வேண்டும். விதைகள் வளரும் போது செடிகளுக்கு இடையில்,10 செ.மீ., இடைவெளி இருக்கும்படி நடவு செய்ய வேண்டும்.

வரிசைக்கு இடையில், 30 செ.மீ., இடைவெளி இருக்க வேண்டும். மண் பரிசோதனை செய்து பரிந்துரைக்கப்பட்ட சத்துக்களை கொடுத்தாலே பயிர்கள் நன்குவளரும்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தினால் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுாட்டக்கலவையை, ஒரு லிட்டர் நீரில், 2.5 கிலோ அளவில் கலந்து, கைத்தெளிப்பான் கொண்டு விதைத்த, 35 மற்றும் 50 வது நாளில் தெளிக்கவேண்டும். இந்த முறையை பின்பற்றினால் நிலக்கடலையில் நல்ல சாகுபடி கிடைக்கும்.இவ்வாறு, கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X