அமெரிக்காவில் 1.25 லட்சத்தை நெருங்கும் கொரோனா பலி

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
USA, coronavirus, covid 19, united states, Coronavirus update, Corona news, Covid 19 pandemic, அமெரிக்கா,கொரோனா

வாஷிங்டன்: கொரோனாவுக்கு அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 806 பேர் பலியாயினர்; 39 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், ஐரோப்பியா, அமெரிக்காவில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது. ஐரோப்பியாவில் பலி எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ள நிலையில், அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 806 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,24,279 ஆக உயர்ந்தது. புதிதாக 39,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பும் 24,63,168 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10,39,701 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.


வட அமெரிக்கா:


வட அமெரிக்காவில் இதுவரை 28,61,686 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,58,848 பேர் பலியாகி உள்ளனர். இங்கு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்புள்ள நாடாக மெக்ஸிகோ (பாதிப்பு - 1,91,410; பலி - 23,377), கனடா (பாதிப்பு - 1,02,242; பலி - 8,484) உள்ளது.


latest tamil news




தென் அமெரிக்கா:


தென் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 19 லட்சத்தை தாண்டியது. அங்கு 19,26,777 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 76,025 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு பிரேசிலில் அதிகபட்சமாக 11,92,474 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 53,874 பேர் பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40,995 பேருக்கு தொற்று உறுதியானது; 1,103 பேர் பலியாகினர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X